Saturday, 30 November 2013

தி சங்கர நேத்ராலயா அகாடெமி வழங்கும் மரபியல் ஆலோசனை மற்றும் மரபணு பரிசோதனை - ஒரு நாள் கருத்தரங்கு

தி சங்கர நேத்ராலயா அகாடெமி வழங்கும்

மரபியல் ஆலோசனை மற்றும் மரபணு பரிசோதனை
 
பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு

நாள்:      டிசம்பர் 21, 2013
 
இடம்:   ஸ்ரீ வி டி ஸ்வாமி ஆடிட்டோரியம்,  சங்கர நேத்ராலயா,
               18 கல்லூரி சாலை,   சென்னை 600 006.

---------------------------------------------------------------------------------------------------
சென்னை சங்கர நேத்ராலயாவின் தலைமை அமைப்பான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சகோதர அமைப்பான பார்வை ஆராய்ச்சி நிறுவனத்தின் அங்கமாக 1993 ம் ஆண்டுஉயிரணு மரபியல் ஆய்வுக்கூடம்ஆரம்பிக்கப்பட்டது. இன்று அந்த ஆய்வுக்கூடம் வளர்ந்து மிகச்சிறப்பான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய  மூலக்கூறியல் மற்றும் மரபியல் துறையாக (Department of Genetics and Molecular Biology) வளர்ந்து கண் மரபியல் துறையில் உலகத்தரத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நிறைவேற்றி வருகிறது.


ரபியல் ரீதியான கண்நோயகளுக்கு காரணமான மரபணுக்களின் தொகுதியினை ஆராய்ந்து, தலைமுறைகள் ரீதியான ரீதியாக பகுப்பாய்வு செய்து, ஒரு நோயாளியின் மரபியல் கண் நோய் எவ்வாறு அந்த குறிப்பிட்ட நோயாளியின் மரபணுக்களோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதையும் ஆராய்ந்து, அந்த மரபணுக்களின் செயல்பாட்டு பண்புகள் மூலம் அந்த நோய் செயல்படும் விதத்தினை மரபணு கட்டமைப்பாக வெளிக்காட்டுவது இந்த துறையின் சிறப்பு அம்சமாகும்.இந்த துறை இருபது வருடங்களைக் கடந்த நிலையில் மேலும் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக்கொண்டவற்றை பகிர்ந்து கொள்ளும் விதத்தில்எஸ்.என். ஜெனெடிக்ஸ்என்ற தலைப்பில் கருத்தரங்குகளை நடத்த முடிவு செய்துமரபியல் ஆலோசனை மற்றும் மரபணு பரிசோதனைஎனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது.


இந்த ஒரு நாள் கருத்தரங்கின் முக்கிய நோக்கம், மருத்துவ மாணவர்கள், ஆய்வியல் மாணவர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்களிடையே மரபியல் ஆலோசனை மற்றும் மரபணு பரிசோதனை பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதே ஆகும்.
 
இந்த கருத்தரங்கின் முக்கிய சிறப்பு அம்சங்கள்:

1.தற்போது இந்தியாவில் மரபியல் ஆலோசனை முறைகள்,
2.தற்போதைய நோய் கண்டறிவதில் மூலக்கூறியலின் பங்கு,
3.மருத்துவத்துறையில் மரபணு சோதனையின் முக்கியத்துவம் குறித்த
 
செய்திகளை அனுபவங்களை வல்லுநர்கள் தங்களது சிறப்புரைகள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும்,


1.     பாரதத்தில் மரபியல் ஆலோசனை - தற்போதைய நிலை மற்றும் தேவைப்படும் எதிர்கால முன்னேற்றம்,
2.     மரபியல் ஆலோசனை - ஒரு பொதுவான மதிப்பீடு,
3.     மரபியல் குறைபாடும் கண் நோய்களும் - ஆலோசனை மற்றும் பிறப்பிற்கு முந்தைய நோய் அறிதலில் முக்கியத்துவம்.
4.     மூலக்கூறியல் முறைப்படி நோய் அறிதலும் கண் நோய்களும்,
5.     விழித்திரை சிதைவு நோய்களுக்கான மூலக்கூறியல் முறைப்படி நோய் அறிதலும் - அவற்றிற்க்கான சமூக மற்றும் மறுவாழ்வு ஆலோசனைகள்,
6.     மரபியல் நோய் அறிதலும் கவனிக்கப்படாத தொடர்புகளும் - ஒரு கண் மருத்துவரின் பங்கு,
7.     பரம்பரை கண் நோய்களை கண்டறிதலும் அவற்றிற்க்கான தற்போதைய கையாளும் முறைகளும் எதிர்காலத்தேவைகளும்,
8.     விழி மரபணு நோய் - ஒரு மேம்பாடு,
9.     அயோம் டோரண்ட் பெர்சனல் ஜீனோம் மெஷின் மூலம் ஆரம்பகட்ட ஓப்பன் ஆங்கிள் கிளகோமா நோய்க்கான முழுமையான மைட்டோகாண்ட்ரியல் மரபணு கட்டமைப்பினை கண்டறிதல் பற்றிய விளக்கம்,
10.   நீரிழிவில் மரபியல் பண்பு
11.   மரபியல் ஆய்வுக்கூட மேலாண்மை
  1. சங்கர நேத்ராலயாவின் நாதெள்ள சம்பத்து செட்டி மருத்துவ ஆய்வுக்கூடத்தில் நடைபெறும் சிறப்பு பரிசோதனைகள் பற்றியும் விளக்கங்களும் விவாதங்களும் நடைபெற உள்ளன.
 
 
 
மேலும் விவரங்களுக்கும் முன் -பதிவுக்கும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

டாக்டர் ஜெயமுருக பாண்டியன்
துறைத்தலைவர் மற்றும் கருத்தரங்குஅமைப்புச் செயலர்
மரபியல் மற்றும் மூலக்கூறியல் துறை
சங்கர நேத்ராலயா, சென்னை 600 006
தொலைபேசி எண்:044 42271807
மெயில்: drajp@snmail.org
இணையத்தள முகவரி :www.thesnacademy.ac.in


--
-------------------------------------------------------------------------
A Mahalingam, BSc, BSOA (BITS), PG DOM, T&D (ISTD), EDHM (LIBA), M B A (HM)
Academic Officer /Assistant Registrar
The Sankara Nethralaya Academy(TSNA)
(Unit of Medical Research Foundation)
No.9, Vanagaram To Ambattur Road, Ayanambakkam
(off  P H Road),Chennai - 600 095, Tamil Nadu, India.
Ph No: 044 - 4908 6000,
Fax: +91-44-28254180,Mobile : (0) 97104 85295E Mail : mahali@snmail.org / sn.mahali@gmail.com
------------------------------------------------------------------------------------------------------Please visit our web sites: www.thesnacademy.ac.in (TSNA) & www.sankaranethralaya.org

No comments:

Post a Comment