பத்திரிகை செய்திக்குறிப்பு வெளியீடு
ப்ளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்
மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு!
மருத்துவ துறை வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகளுக்கான
கல்வி ஆலோசனை முகாம்
அனுமதி இலவசம்
நாள் : 13.07.2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 09.30 0 மணி
இடம் : தி சங்கர நேத்ராலயா அகாடெமி,
9 வானகரம் - அம்பத்தூர் ரோடு, அயனம்பாக்கம்,
சென்னை 600 095.
சென்னை, சங்கர நேத்ராலயா கண் மருத்துவ மனையின் ஒரு பிரிவான, தி சங்கர நேத்ராலயா அகாதெமி, ப்ளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஜூலை 13, 2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 00 மணி அளவில் ஒரு கல்வி ஆலோசனை முகாம் ஒன்றினை ஏற்ப்பாடு செய்துள்ளது.
தி சங்கர நேத்ராலயா அகாடெமி வழங்கும் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகள், மற்றும் டிப்ளமோ படிப்புகள் சென்னை, கிண்டியில் உள்ள தமிழ் நாடு அரசின் தமிழ் நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தின் அங ்கீகாரத்துடன் நடத்தப்பட்டு பல்கலைக்கழக பட்டம் / சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த படிப்புகள் பற்றி நடைபெறும் மருத்துவ துறை வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகளுக்கான இலவச ஆலோசனைக்ளை முகாமில் பெற்றுக் கொள்ளலாம்.
ப்ளஸ் 2 வில் அறிவியல் பாடங்களை படித்து தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள், சங்கர நேத்ராலயா அகாடெமி வழங்கும் மருத்துவ துறை வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள துறை வல்லுநர்களுடன் நேரில் சந்தித்து பேசலாம்.
மேலும் விவரங்களுக்கு : கல்வி அதிகாரி அவர்களை snacademy@snmail.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள்
98406 55405 / 044 4908 6000
முன்பதிவு செய்து கொள்வது நன்று.
No comments:
Post a Comment