சங்கர நேத்ராலயா அகாதெமி சார்பில் ஏழை மாணவர்களுக்கு இலவச
படிப்புகள்: - DINAMANI NEWS - 14.07.2014
மருத்துவம் சார்ந்த பட்டயம், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என சென்னை
சங்கர நேத்ராலயா அகாதெமி தெரிவித்துள்ளது.
சென்னை வானகரத்தை அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள
சங்கர நேத்ராலயா அகாதமியில் 'பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன
படிக்கலாம்' என்ற ஆலோசனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சங்கர நேத்ராலயா அகாதெமியின் முதல்வர் எஸ்.ரமணி மற்றும் மருத்துவ சமூகவியலாளர் ஏ.பி.இருங்கோவேல் பேசியது:
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் அடுத்து என்ன
படிப்பது, எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்துடன் காணப்படுகின்றனர்.
அதற்கு காரணம். தற்போது தேர்ந்தெடுக்கும் படிப்புக்கு வருங்காலத்தில் வேலை
கிடைக்குமா என்ற
சந்தேகம் மாணவர்களிடம் நிலவுவதுதான். இந்நிலையில் வளர்ந்து வரும் துறை மற்றும் வேலை வாய்ப்பு அதிகம்
உள்ள துறையைத் தேர்ந்தெடுப்பது சிறந்த தீர்வாக அமையும். இதில், வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றான மருத்துவத் துறையை
மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
இதில், எம்.பி.பி.எஸ். படிப்பு மட்டுமல்லாமல் செவிலியர், மருந்தியல், மருத்துவமனை மேலாண்மை, மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன.
இதனை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு உள் நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன
என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அதிக மதிப்பெண் பெற்ற, பொருளாதாரத்தில் பின்
தங்கிய மாணவர்களுக்கு,
சங்கர நேத்ராலயா அகாதெமியில் கற்பிக்கப்படும் மருத்துவம் சார்ந்த பட்டய, இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகள் இலவசமாக வழங்கப்படும் என அகாதெமியின் முதல்வர் எஸ்.ரமணி தெரிவித்தனர்.மேலும் தொடர்புக்கு:
98406 55405.
No comments:
Post a Comment