Thursday, 26 June 2014

After 10-yr Lull, FRCS Exam Stages a Comeback in India - Sankara Nethralaya

 After 10-yr Lull, FRCS Exam Stages a Comeback in India
Published: 27th June 2014 07:46 AM
Last Updated: 27th June 2014 07:46 AM
CHENNAI: After a decade, Britain’s prestigious FRCS examination made a comeback in India, when candidates from across six Asian countries appeared for the second segment of the three-part Ophthalmology tests conducted at Sankara Nethralaya in Chennai.
Briefing the media here on Thursday, an examiners’ team, led by Dr Robert Murray, from the Royal College of Surgeons of Edinburg (RCSEd) that conducts the examination, said a total of 39 candidates from India, Pakistan, Singapore, Myanmar, Indonesia and Sri Lanka took the FRCS (Part B) examination in Ophthalmology at the leading eye care hospital in the city. The examination was an exhaustive evaluation of the clinical expertise of the candidates, who had qualified Part A (theoretical). The final part included four years of training, the examiners said.   
Stating that the Asian system of education seemed to be on the right path, Dr P Chakraborty, a JIPMER graduate and FRCSEd examiner, said the objective was to promote educational research and training exchanges between the institutions in the UK and India.
“We are here because of the demand,” Dr Murray said, adding that the last two parts of the FRCS examination revolved around good medical practices, including ethics. Candidates must answer questions related to interactions with patients, colleagues and drug companies. “Ethics is covered in both parts, but in greater detail in Part C,” he said.
On the quality of the Part B candidates, another examiner, Dr Simon Madge, said, while some were outstanding, others needed more training.
Dr T S Surendran, vice-chairman, Medical Research Foundation, Sankara Nethralaya, said the FRCS examination was seeing a revival at the hospital after a break of 10 years.

சங்கர நேத்ராலயாவுக்கு கௌரவம் - எஃப்ஆர்சிஎஸ் (எடின்பரோ) தேர்வு


எஃப்ஆர்சிஎஸ் (எடின்பரோ) தேர்வு:

சங்கர நேத்ராலயாவுக்கு கௌரவம்

எஃப்ஆர்சிஎஸ்-எடின்பரோ கண் மருத்துவ ஃபெலோஷிப் படிப்பு குறித்து விளக்கும் (வலமிருந்து) டாக்டர் ராபர்ட் முர்ரே,டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன், டாக்டர் பி.சக்கரவர்த்தி.

இங்கிலாந்து ராயல் மருத்துவக் கல்லூரியின் (எஃப்ஆர்சிஎஸ்-எடின்பரோ) கண் மருத்துவ ஃபெலோஷிப் படிப்பு தேர்வு மையமாகச் செயல்படும் வகையில் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராயல் மருத்துவக் கல்லூரி எஃப்ஆர்சிஎஸ்-எடின்பரோ கண் மருத்துவ தேர்வுக் குழுவின் தலைவர் டாக்டர் ராபர்ட் முர்ரே, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன், தேர்வுக் கண்காணிப்பாளர் டாக்டர் பி.சக்கரவர்த்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

எழுத்துத் தேர்வு (பாகம் ஏ), சிகிச்சை தேர்வு (கிளினிக்கல் எக்ஸாமினேஷன்-பாகம் பி), இறுதிப் பயிற்சி (பாகம் சி) ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்ட மொத்தம் ஆறு ஆண்டுகளை உள்ளடக்கிய "எஃப்ஆர்சிஎஸ்-எடின்பரோ கண் மருத்துவ ஃபெலோஷிப்'புக்கான தேர்வை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தும் வாய்ப்பை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை பெற்றுள்ளது.

கண் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, உயர் படிப்பான இந்த ஃபெலோஷிப்புக்கு ஆன்லைன் மூலம் ஏராளமானோர் பதிவு செய்தாலும்கூட, 39 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 27) தேர்வு முடிவடைகிறது. வரும் காலங்களில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை போன்று மேலும் பல மையங்களில் "எஃப்ஆர்சிஎஸ்-எடின்பரோ கண் மருத்துவ ஃபெலோஷிப்'பை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

வேலையைக் காதலி!- குரங்கை நினைக்காமல் மருந்து குடிக்கலாம் - டாக்டர் ஆர். கார்த்திகேயன்


வேலையைக் காதலி!- குரங்கை நினைக்காமல் மருந்து குடிக்கலாம் - டாக்டர் ஆர். கார்த்திகேயன்

வரலாறு காணாத முக நூல் பகிர்வுகளும், இன்னும் வேண்டும் என்று கேட்ட கடிதங்களும் மீண்டும் பயங்கள், பதற்றங்கள் பற்றி எழுதத் தூண்டியது. இந்த வாரமும் பயடெக்னாலஜி! (பயம் பற்றித் தொழில்நுட்பப் பாடம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம், சும்மா ஒரு பில்ட் அப் வார்த்தை!)

முதலில் ஒரு நம்பிக்கை வார்த்தை. எல்லாப் பயங்களையும் வென்றெடுக்கலாம். நம்பிக்கை, முயற்சி, வழிகாட்டல் இருந்தால் நிச்சயம் முடியும்.

இன்று மனித வளப் பயிற்சி, மன சிகிச்சை, நிர்வாகக் கல்வி, ஆலோசனை, சிறப்புரை என எல்லாத் தொழில் நடவடிக்கைகளுக்கும் ஆதாரம் பேச்சுதான். ஆனால் பள்ளியில் படித்தபோது எனக்குத் திக்கு வாய் பிரச்சினை இருந்தது என்றால் நம்புவீர்களா?

பிறகு மருத்துவ உளவியல் படிக்கும்போதுகூட மேடைகளில் பேச சிரமப்பட்டிருக்கிறேன். எப்படியிருந்தாலும் நீ உன்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களிடம் தனிமையில் பேசப்போகிறாய்! மேடைப் பேச்சு கிடையாதே. அப்புறம் என்ன பயம்?” என்று தேற்றியிருக்கிறார் ஓர் ஆசிரியை. மேடைப் பேச்சுதான் என் வாழ்க்கை என நாங்கள் இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை.

இன்றுவரை உலகமெங்கும் சென்று, 400 நிறுவனங்களுக்கு மேல் சுமார் 48,000 பேருக்குப் பயிற்சி அளித்த நான் ஒரு காலத்தில் பேசப் பயந்தவன் என்ற தகவலைச் சொல்வதன் காரணம்- உங்களாலும் முடியும் என்று சொல்லத்தான்.

நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்!

அடுத்து, முடிவைவிட முயற்சி முக்கியம். வெற்றியா தோல்வியா என்று பார்க்காதீர்கள். முயற்சி எடுங்கள். கண்டிப்பாக வெற்றி அடையும் இலக்குகளுக்காக மட்டும் தாம் முயல்வீர்கள் என்றால் புதிதாக எதையும் செய்ய முடியாது. அதனால் உங்களைப் பரீட்சித்துப் பார்க்க எல்லா வழிகளையும் ஆராயுங்கள்.

நேர்காணல் பயம் என்றால் அதை மட்டும் நினைக்காமல், எந்தெந்த இடங்களில் பேச வாய்ப்பிருக்கிறது என்று பார்த்து அங்கெல்லாம் முயலுங்கள். பெரிய பதவிகளில் உள்ள பலர் இன்றும் மைக் பிடிக்க நடுங்குவதை நான் பார்த்திருக்கிறேன். கீழே உட்காரும்போதுள்ள நகைச்சுவை உணர்வு மேடை ஏறினால் காணாமல் போய்விடும். அதனால் எங்கு பேசினாலும் இயல்பாகப் பேசும் மன நிலையைப் பெறப் பாருங்கள்.

திட்டமிடுதலும் ஒத்திகை பார்ப்பதும் நல்லதுதான். ஆனால் அது மட்டும் காப்பாற்றாது. பதற்றம் வருகையில் எல்லாம் மறந்து போகும். அதனால் இயல்பு நிலை கொள்வதுதான் இலக்கு. நிறைய நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனும்போது எல்லாம்தான் மறந்துபோகும். பதற்றமும் இயல்பு நிலையும் எதிர் உணர்வுகள். இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும்.

பதற்றத்தைக் குறைக்க வேண்டும் எனும்போதே பதற்றம் பெருகும். காரணம் உங்கள் மனம் பதற்றத்தை நினைக்கையில் உங்கள் உடல் பதற்றத்திற்குத் தயாராகிறது. இது குரங்கை நினைக்காமல் மருந்து குடிக்கச் சொன்னது போல.

அதற்கு மாறாக, உங்களைத் தளர்வு நிலையில், இயல்பு நிலையில் வைத்திருக்கும் விஷயங்களுக்குத் தயாராகுங்கள். இதைப் பதற்றம் வரும்போது செய்ய முடியாது. பதற்றம் இல்லாத காலத்தில் பழக்கம் செய்யுங்கள்.

யோகா செய்யலாம், ரிலாக்சேஷன் பயிற்சிகள் செய்யலாம். உடல் சார்ந்த விளையாட்டுகள் உதவும். உங்களுக்குப் பிடித்த, நம்பிக்கையுள்ள எந்த வழியைப் பயன்படுத்தினாலும் சரி. இந்த இயல்பு நிலை நிச்சயம் பிடிபடும். இதுதான் சிக்கலான நேரத்தில் பதற்றத்தின் தீவிரத்தைக் குறைக்கும்.

எல்லா விளையாட்டு வீரர்களும் பதற்றமில்லாமல் பேட்டி கொடுப்பதற்குக் காரணம் அவர்கள் மேற்கொள்ளும் உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சிகள்.

ஒரு நிகழ்வுக்குத் தயார் செய்தல் என்பது அந்தக் காலையில் தொடங்கும் செயல் அல்ல. அது பல வாரங்கள், மாதங்கள் அல்லது வருடங்களுக்கு முன்னரே செய்ய வேண்டியது. அது அந்த நிகழ்வின் முக்கியத்தைப் பொறுத்தது. நேர்காணலில் பதற்றத்தைக் குறைப்பதற்கும் இந்தத் தங்க விதி பொருந்தும்.

நாளை நேர்காணல் என்றால் இன்று என்ன செய்ய என்று யோசிப்பது உதவாது. என் யோசனை: எல்லா மாணவர்களும் படிக்கும் காலத்திலேயே நேர்காணலுக்குத் தயாராக வேண்டும்.

சரி, நேர்காணல் நாளுக்குப் பயம் போக்கும் யோசனைகளே கிடையாதா?

உண்டு. இதோ:

முதலில் நேர்காணல் நேரத்திற்கு ஒரு மணி நேரமாவது முன்னதாகச் செல்லுங்கள். அந்த இடமும் சூழலும் பழகும். இது இயல்பு நிலையைக் கூட்டும்.

அங்கு வந்த மற்றவர்களுடன் பேசுங்கள். ஆனால் பயங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டாம். பொது விஷயங்கள் மட்டும் பேசுங்கள்.

நேர்காணலை உரையாடல் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்களைச் சோதிக்க அழைத் துள்ளார்கள் என்ற எண்ணம் போகும்.

தெரியவில்லை என்றால் தெரி யாது என்று கூனிக் குறுகாமல் சொல்லுங்கள். தெரிந்ததை ஆர்வமாகச் சொல்லுங்கள்.

மெலிதான நகைச்சுவை கை கொடுக்கும். அது உங்களையோ பிறரையோ தாழ்த்தாமல் இருத்தல் அவசியம்.

பதற்றத்தில் பதில் மறந்துவிட்டது என்றால் அதை அப்படியே சொல்லிவிட்டு பிற விஷயங்களைப் பேசுங்கள். கிளறாமல் விட்டால் மீண்டும் ஞாபகத்துக்கு வரும்.

கை நடுக்கம், குரல் உடைதல், வியர்வை போன்றவை உங்கள் பதற்றத்தைக் காட்டிக் கொடுக்கலாம். அதை வெளிக்காட்டுவது ஒரு குறையில்லை என்று எண்ணினால் அவை குறையும். தடுக்க நினைத்தால் அதிக நேரம் நீடிக்கும்.

நேர்காணல் செல்லும் முன் பிடித்த இசை, பிடித்த மனிதர், பிடித்த உணவு, பிடித்த புத்தகம், பிடித்த சட்டை எல்லாம் பிடித்ததாகத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

கிளம்பும் முன் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள்: என்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்யப் பார்க்கிறேன். இதை ஓர் அனுபவமாகக் கொள்கிறேன்!

இனி என்ன? பயமில்லை. ஜெயம் உண்டு!

டாக்டர் ஆர். கார்த்திகேயன்- தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

 

The Sankara Nethralaya Academy`s Continuing Optometric Education On Speciality Contact Lenses


 

The Sankara Nethralaya Academy`s

Continuing Optometric Education

On Speciality Contact Lenses

An eye opener for practising Optometrists

 

The third session in the Nethra Vidya series of Continuing Optometric Education (COE) 2014 was conducted on 15th June 2014. The topic was speciality contact lens fitting and it was enthusiastically attended by 40 Optometry graduates and young practitioners.

 

The educative session started with a welcome address by Anuja R Singh, Head – Optometry Education, The Sankara Nethralaya Acdemy who took the audience through the various courses launched by the Academy in the academic year 2014-15.

 

This was followed by the Head of Contact lens Clinic Dr. Rajeswari Mahadevan and her team of faculty comprising of Mrs. Amudha Oli, Ms. Rajni, Ms. P.Sakunthala,  Mr. Biman Das, presenting highly informative and interactive sessions on various aspects of speciality contact lens fitting like Rose K lenses, Piggy backs, soft torics and Rigid Gas permeable contact lenses.

 

The highlight of the day was an unique presentation by Dr. Rajeswari on Advanced speciality contact lenses like Boston prose, semi scleral, Ortho K and hybrid c/ls. Afternoon saw the participants engage in live practical sessions where the different types of contact lenses were fitted on selected patients and student voulunteers.

 

The highly interesting session ended with a vote of thanks by the coordinator Ms. Ashwini, The Sankara Nethralaya Academy.

 

To Know More & Register Next COE Session : Contact:

Dr. Anuja R Singh, B.Opt.,M.A.,M.hil.,Ph.D

Manager – Optometry: C U Shah Sankara Nethralaya

Head - Optometry Programs:The SN Academy

Units of Medical Research Foundation,Chennai

mob : 91769 44244 / eMail : anujar@snmail.org>


 

ABDO introduces first dispensing diploma in India - Sankara Nethralaya Academy, a unit of Medical Research Foundation, Chennai


 
ABDO introduces first dispensing diploma in India
 
Association of British Dispensing Opticians (ABDO) has teamed up with India’s Sankara Nethralaya Academy, a unit of Medical Research Foundation, Chennai, India to introduce the first professional training course to people already working within the optical sector in the country.
Currently there is no professional dispensing training available in the subcontinent and therefore, unlike in the UK, those working in the sector are not professionally qualified. ABDO hopes that by teaming up with Medical Research Foundation, Sankara Nethralaya the Diploma in Ophthalmic Dispensing will ensure that higher standards are followed in the future.
The Association’s new course will cover both the technical and more advanced aspects of dispensing, with students required to attend a series of block release sessions supervised by ABDO tutors at the Elite School of Optometry.
The Diploma is a three-year course offered via distance learning. Running over six semesters, students will be assessed through theory and practical-based examinations each term.
ABDO general secretary, Tony Garrett commented: “There is a steadily growing recognition worldwide of the need for professionally qualified dispensing opticians and this is highlighted by the initiative ABDO has jointly founded in India.
“The Association is delighted to be the first organisation to form a partnership that will inevitably bring about higher optical dispensing standards in this rapidly emerging nation. It also further demonstrates ABDO’s successful and continued expansion into international markets.”
To Know More, Contact:
Dr. Anuja R Singh, B.Opt.,M.A.,M.hil.,Ph.D
Manager – Optometry: C U Shah Sankara Nethralaya
Head - Optometry Programs:The SN Academy
Units of Medical Research Foundation,Chennai
mob : 91769 44244 / eMail : anujar@snmail.org>
 

Wednesday, 25 June 2014

Sankara Nethralaya, Chennai - பார்வை ஒன்றே போதுமே! - டாக்டர். ஆர்.கார்த்திகேயன்


 
பார்வை ஒன்றே போதுமே! - டாக்டர். ஆர்.கார்த்திகேயன்

 

மஹா பெரியவர் என அழைக்கப்பட்ட காஞ்சி சங்கர மட ஸ்ரீ சந்திரசேகர சுவாமிக்கு இரண்டாம் கண்ணிலும் காடராக்ட் பாதிப்பு என்று அழைப்பு வருகிறது. முதல் கண் ஏற்கனவே முற்றிலும் பார்வை இழந்திருந்த நிலையில் இந்த சிகிச்சை மிக முக்கியமானது. தலை குளிக்காமல் இருக்க வேண்டும் என்கிற மருத்துவ அறிவுரையை தன் பூசை புணசஸ்காரத்திற்காக மீறியதால் முதல் கண் பார்வை பறி போனது. மஹா பெரியவரை யார் நிர்பந்திக்க முடியும்? தவிர யார் வைத்தியம் செய்ய வேண்டும் என்பதே அவர் முடிவு செய்வதாயிற்றே!

அவர் தேர்ந்தெடுத்த கண் மருத்துவர் டாக்டர்.பத்ரிநாத்.

பரிசோதித்துப் பார்த்ததில் அறுவை சிகிச்சை அவசியம் என்று தெரிகிறது. சுவாமியும் சம்மதிக்கிறார். வரதராஜப் பெருமாள் கோயில் அருகே ஒரு மண்டபம் அவசரமாக அறுவை சிகிச்சை மையமாக மாறுகிறது.

தன் கடமையிலிருந்து சிறிதும் தவறாமல், எல்லாம் முறைப்படி செய்கிறார்.

சிகிச்சைக்கு பின்னும் தினசரி தானே நேரில் சென்று மருந்து இட்டு பார்த்துக் கொள்கிறார். எல்லாவற்றுக்கும் ஒத்துழைத்த சுவாமி சொல்கிறார்: “ என் கண் சரியானால் தான் அவர் மருத்துவத் தொழில் செழிக்கும். இல்லாவிட்டால் தேவையில்லாத அவப்பெயர் வரும். அதனால் தான் பூரணமாக ஒத்துழைத்தேன்!”

அந்த பூரண ஒத்துழைப்பு மட்டுமல்ல, அன்பும் ஆசீர்வாதமும் தான் சங்கர நேத்ராலயாதுவங்க வைத்தது. இன்று தழைக்க வைத்துள்ளதுஎன்கிறார் டாக்டர் பத்ரிநாத்.

வி.வி.ரங்கனாதன், ஜார்ஜ் ஸ்காரியா மற்றும் மீரா பிரசாத் எழுதியுள்ள “ In- Sight: Sankara Nethralaya’s Passion for Compassion” என்கிற இந்த புத்தகம் சங்கர நேத்ராலயாவின் சரித்திரத்தை சொல்லும் முயற்சி.

என் சரிதை எழுதுவதாக இருந்தால் புத்தகமே வேண்டாம்என்று தீவிரமாக இருந்தவர் நேத்ராலயா பற்றிய புத்தகம் மட்டும் என்றபோது தான் சம்மதிக்கிறார். அதுவும் அனைவரையும் பேட்டியெடுத்து போடச்சொன்னார்.

என் பார்வையில் இது ஒரு நிர்வாகப் புத்தகம்.

ஒரு சமூக நோக்கமுள்ள நிறுவனம் எப்படி வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பற்கான ஆவணம்.

இன்று Social Entrepreneurship என்பது உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு நிறுவன வகை. தொண்டு நிறுவனங்கள் வியாபார நிறுவனங்களைப் போல திறமையாக செயல்படுதல் இதன் சிறப்பு.

சங்கர நேத்ராலயா இந்த வகையை சேர்ந்த நிறுவனம் என்பதால் இந்த புத்தகத்தை ஆய்வு செய்தல் அவசியம்.

1978ல் துவங்கிய நிறுவனம் இன்று ஆலமரமாய் வளர்ந்து மருத்துவ சிகிச்சை, ஆராய்ச்சி, கல்வி, தொழில் நுட்பம், சமூகப்பணி என இன்று ஒரு பெரும் மக்கள் நல இயக்கமாக வளர்ந்துள்ளது.

எப்படி வந்த்து இந்த வளர்ச்சி?

பல்கிவாலாவின் வார்த்தைகளில் சொல்வதானால் சங்கர நேத்ராலயாதான் நான் பார்த்ததிலேயே மிக சிறப்பாக இயங்கும் மிக சுத்தமாகவும் உள்ள மருத்துவமனை!” தன் சொத்தில் இவர் இரண்டு கோடி எழுதி வைத்ததற்கும், டாடா குழுமத்திற்கு நன்கொடை அளிக்க பரிந்துரைத்தற்கும் நேத்ராலயாவின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம்.

ஒரு வெற்றி பெற்ற நிறுவனத்திற்கு தேவையான அனைத்தும் நேத்ராலயாவில் உள்ளது புத்தகம் படிக்கையில் தெரிகிறது.

சரியான தலைமை, தலைவரின் தெளிவான பார்வை, மக்களை முன் மாதிரியாக வழி நட்த்தல், தொழில் திறன், சந்தை பற்றிய அறிவு, மாற்றங்களை சுலபமாக ஏற்றுக்கொள்ளுதல், சமரசம் செய்து கொள்ளாத அடிப்படை விழுமியங்கள், ஒளிவு மறைவு இல்லாத வழிமுறைகள்...இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

சில எண்ணங்களும் செயல்பாடுகளும் குறிப்பிடத்தகுந்தது.

மிக ஆரம்ப காலத்திலேயே தனியுரிமை தவிர்த்து, டிரஸ்ட், சொசைட்டி என பிறர் கண்காணிப்பில், ஆதரவில் மருத்துவ மனையை வளர்க்க நினைத்தார் டாக்டர். பத்ரிநாத். அதே போல் மற்ற கண் மருத்துவமனைகளை போட்டியாளர்களாகப் பார்க்காமல் எல்லாருடனும் கூட்டு செயல்பாடுகளை ஊக்குவிக்கிறார். அணுகுமுறையில் நேர் எதிரான அப்போலோ மருத்துவ மனை அதிபர் டாக்டர் பிரதாப் ரெட்டி இவருக்கு சிறந்த நண்பர்.

இந்த மருத்துவமனயில் சிகிச்சை பெற்றவர்களில் பிரபலங்கள் பட்டியல் ரொம்ப நீளம். எம். எஸ். சுப்புலட்சுமி நிதி திரட்டுவதற்காக பாடியிருக்கிறார். உலகப் புகழ் நிர்வாக மேதை சி.கே.பிரகலாத் நேத்ராலயாவிற்கு நிதி திரட்ட அமெரிக்காவில் உரை நிகழ்த்தினார். ரஜினிகாந்த் நடிக்க இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் படம் எடுத்து கொடுத்துள்ளார்.

புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் டாஃபே மல்லிகா ஸ்ரீனிவாசன், எல் & டி நாயக், ஹெச்.எஃப்.டி.சி. தீபக் பரேக், தி இந்து முரளி, பார்த்தி மிட்டல், அப்போலோ பிரதாப் ரெட்டி என கனமான மனிதர்களின் கனமான பங்களிப்பு. ஹார்வர்ட் பிசினெஸ் ரெவ்யூ படிக்கிற உணர்வு.

உலகின் தலை சிறந்த நிறுவனங்கள் மற்றும் மனிதர்களின் தொடர்போடும் ஆதரவோடும் ஏழை இந்தியாவின் பார்வை ஒன்று மட்டுமே தங்கள் இலக்கு என தொண்டு புரிகிறது நேத்ராலயா.

வருங்கால சவால்களையும் அலசுகிறது புத்தகம். தொழில் நுட்பமோ, நிதியோ, சேவை முறைகளோ நிஜமான சவால்கள் அல்ல. மனித வளம் தான் வருங்கால சவால் என்கிறது.

டேவிட் போர்ன்ஸ்டென் சமூகத் தொழிலதிபர்கள் (social entrepreneurs) ” பற்றி கூறுகையில் அவர்களுக்கு 6 குணங்களை ஆதாரமாக்க் கூறுகிறார்:

தன்னை திருத்திக் கொள்ள/மாற்றிக் கொள்ள எப்பொழுதும் தயாராக இருத்தல

வருவதை பங்கிடத் தயாராக இருத்தல

பழைய நிறுவன கட்டமைப்புகளிலிருந்து விடுபடுதல

மற்ற துறையினருடன் உறவாட தயாராக இருத்தல

அமைதியாக ஆராவாரம் இல்லாமல் பணியாற்றல

அப்பழுக்கில்லாத ஒழுக்கம் காத்தல

இவை அனைத்தும் சங்கர நேத்ராலயாவிற்கும் டாக்டர் பத்ரி நாத்திற்கும் பொருந்தும்.

ஒவ்வொரு சமூக பணியாளரும் தொழில் முனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

சமூகத்திற்கு உதவும் பிசினஸ் ஐடியா உள்ளதா? ஒரு முறை சங்கரா சங்கரா என்று நேத்ராலயாவை சுற்றிப் பாருங்கள்.அல்லது இந்த புத்தகத்தை படியுங்கள்!

டாக்டர். ஆர்.கார்த்திகேயன் - gemba.karthikeyan@gmail.com