பத்திரிகை
செய்திக்குறிப்பு
தி சங்கர
நேத்ராலயா அகாடெமி
நடத்தும்
வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும்
இரண்டு வருட
டிப்ளமோ இன்
ரெஃப்ராக்ஷன் அண்டு டிஸ்பென்சிங்
படிப்புக்கு
விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------
கல்வித்தகுதி:
ப்ளஸ் 2 வில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/கணிதம் படங்களில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள்
பெற்றிருக்க வேண்டும்.
சென்னை சங்கர
நேத்ராலயா கண் மருத்துவமனையின் கல்விப்பிரிவான தி சங்கர
நேத்ராலயா அகாடெமி ந்டத்தும், படித்து
முடித்தவுடன் பிரகாசமான வேலைவாய்ப்பினை அளிக்கக்கூடிய, ப்ளஸ் 2 அறிவியல் படித்த மாணவர்களுக்கான இரண்டு வருட
டிப்ளமோ இன் ரெஃப்ராக்ஷன் அண்டு டிஸ்பென்சிங் படிப்பினை வழங்குகிறது.
ரெஃப்ராக்ஷனிஸ்ட்
(Refractionist) எனப்படும்
கண்ஒளியியலாளர்கள் கண் மருத்துவத்துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வல்லுநர்கள்
ஆவார்கள். பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கு மூக்குக்கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ், லோ விசன் எய்ட்ஸ் எனப்படும்
உருப்பெருக்கி உபகரணங்களை பரிந்துரைப்பது இவர்களே. மேலும் கண் மருத்துவமனைகளில்
அடிப்படை கண் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து, கண் நோய்களை அடையாளம் கண்டு, அதற்குத்தகுந்த கண் மருத்துவர்களிடமும், நரம்பியல் நிபுணர்களிடமும் நோயாளிகளை
பரிந்துரைப்பதும் இவர்களே. வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகளிலும் இவர்களது தேவை
அதிகமாக இருக்கிறது.
வேலைவாய்ப்பு:
* இன்று அதிகரித்து வரும் கண்
மருத்துவமனைகள், மற்றும்
ஆப்டிக்கல்ஸ் கடைகளின் தேவைக்கேற்ப ரெஃப்ராக்ஷனிஸ்ட்கள் தற்போது இல்லை. எனவே
சங்கர நேத்ராலயாவைப் போன்ற பன்னாட்டுத்தரம் வாய்ந்த, இலாப நோக்கின்றி செயல்படும்
மருத்துவமனைகளால் உருவாக்கப்படும் வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்பு அவர்கள்
தேர்வுகள் முடித்து மருத்துவமனையின் உள்ளார்ந்த பயிற்சியில் இருக்கும்போதே அவர்களை
பணியில் அமர்த்துவதற்கு கண் மருத்துவமனைகளும், பன்னாட்டு ஆப்டிகல்ஸ் நிறுவனங்களும்
போட்டியிடுகின்றன.
* இந்த டிப்ளமோ படிப்பின் இறுதித்தேர்வில்
மிகச்சிறப்பான இடங்களைப் பெருகின்ற மாணவர்களுக்கு சங்கர நேத்ராலயாவிலும் அதன்
கிளைகளிலும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
* மேலும் பல்வேறு நிறுவனங்களால் கேம்பஸ்
இண்டர்வியூக்கள் நடத்தப்பட்டும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
* சொந்தமாக ஆப்டிகல்ஸ், கான்டாக்ட்
லென்ஸ் சென்டர்கள் வைத்து சிறு தொழிலதிபர்களாகக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.
மேலும்
விவரங்களுக்கு:
டாக்டர் அனுஜா ஆர்
சிங்
தலைவர் -
ஆப்டொமெட்ரி படிப்புகள்
தி சங்கர
நேத்ராலயா அகாடெமி
என்: 9 வானகரம் சாலை, அயனம்பாக்கம்,
சென்னை 600 095. தமிழ் நாடு
No comments:
Post a Comment